18 வயதான இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெறுவார் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் இடாப்பு திருத்தப்படும்போது 18வயதை அடையாதவர்கள் வாக்களிக்க தகுதியை பெறுவதில்லை.
எனவே அவர்கள் 19 வயதிலேயே அந்த தகுதியை பெறவேண்டியநிலை உள்ளது.
புதிய சட்டத்தின்படி ஜூன் மாதத்துக்கு பின்னர் 18 வயதை அடையும் ஒருவர் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் தம்மை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்தநிலையில் வருடந்தோறும் இரண்டு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையிலானவர்கள் வாக்காளர்களாக பதிவு பெறமுடியும்.


0 Comments