நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேடமாக மத்திய மலை நாட்டில் இடைக்கிடையே மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்யும் நேரங்களின் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களின் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தெற்கு பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும். ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: