Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடிந்து விழுந்த ஆலய கட்டடம்! 18 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து அதற்கான பிளேட் கொங்ரீட் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தால் அப் பகுதி சோக மயமாக காட்சியளிக்கிறது






Post a Comment

0 Comments