Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் மாடு திருடிய ஊர்காவல்படை வீரர் மாட்டினார்!

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கால்நடைகள் தொடச்சியாக காணாமல் போவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்பிரிவினர் நேற்றுமுன்தினம் இரவு ஒருவரை கைது செய்துள்ளனர். களவெடுத்த ஒரு மாட்டின் இறைச்சி 25 கிலோவை விற்ற சந்தேகத்தின் பேரில் இடிமன்நகர் கிண்ணயா-3 இல் வசிக்கும் பிச்சைகுட்டி தௌபிக் (வயது 48) என்கின்ற ஊர்காவல் படை வீரர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இறைச்சியை வாங்கிய குற்றத்திற்காக ஜாயா வீதி கிண்ணியா-3 இல் ஹோட்டல் உரிமையாளரான ரம்ழான் தௌபிக் (வயது 54) என்பவரையும் கைதுசெய்தனர். கைது செய்ப்பட்ட ஊர்காவல் படை வீரர் இடிமன் காவல் நிலையத்தில் கடமையாற்றுவர் என குறிப்பிட்ட கிண்ணியா பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

Post a Comment

0 Comments