சித்திரைப் புதுவருடப் பிறப்பு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளுடன் இன்று பிறந்தது.
ஏவிளம்பி வருடப்பிறப்பு வியாழக்கிழமை பின்இரவு 12.48 மணிக்கு பிறந்தது. இதனையடுத்து இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அடியார்கள் புதுவருடத்தை வரவேற்று மருத்து நீர் வைத்து முழுகி, புத்தாடைகள் அணிந்து 12.48 மணிக்கு ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர். பிறக்கும் வருடம் தமது வாழ்வில் துன்பங்களை நீக்கி சகல சௌபாக்கியங்களையும் பெற்று சாந்தியும், சமாதானமுமாக வாழ இறைவனை வேண்டி வழிபட்டனர்.
0 comments: