Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆலய நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்வின் போது இரண்டு குழுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயங்களுக்குள்ளான ஆறு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் 12.04.2017 அன்று ஆலய நிகழ்வு நடைபெற்றுக் கொண்டடிருந்த வேளையில், இரண்டு குழுக்களுகிடையே முறுகல் நிலை ஏற்பட்டு இது 13.04.2017 அன்று கைகலப்பாக மாறியதனையடுத்து வெட்டு மட்டும் தாக்குதல், மிளகாய் தூள் தாவல் காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார். காயங்களுக்கு உள்ளானவர்களில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்படவிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸ் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
DSC02208

Post a Comment

0 Comments