ஆப்கானிஸ்தானில் ஐ. எஸ் பயங்கரவாதிகள் நிலைகள் மீது அணுகுண்டு அல்லாத மிகப்பெரும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 11 தொன்கள் எடையுள்ள டி. என். ரி வெடிமருந்து கொண்ட இந்த குண்டுகளை ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வீசியுள்ளது. இந்த குண்டுகள் முன்னோருபோதுமே யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை . யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது உளவியல் ரிதியான தாக்கத்தையும் இத குண்டுகள் ஏற்படுத்தவல்லன.
இதுவரை அல்லாத அளவில் இது மிகப்பெரிய குண்டுவீச்சாக பார்க்கப்படுகிறது. MOAB ‘மதர் ஆப் ஆல் பாம்’ என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா. சுமார் 300 மீட்டர் அளவிற்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்த இடத்தில்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தங்கி, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
0 comments: