வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கையை விடுத்து தனது விமானம் தாங்கி கப்பலையும் கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள வேளையில் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா இன்று சனிக்கிழமை காலை நடுத்தர வீச்சுடைய ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது.
வடகொரியாவுக்கு எதிராக ஐ நா கடும் பொருளாதர தடையை கொண்டுவரவேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தி இருக்கின்ற நிலையிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
ஆனால் வடகொரியாவின் இன்றைய சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்காவும் வடகொரியாவும் கூறியுள்ளன. ஆனால் இதுதொடர்பில் வடகொரியா எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை வடகொரியாவின் அணுஆயுத சோதனையை நிறுத்துவதில் அமெரிக்கா தோல்வி கண்டுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ பாணியில் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துவந்த போதிலும் அவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாத வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. தனது இரானுய்வ ரீதியிலான எச்சரிக்கைகளை வடகொரியா அலட்சியம் செய்துவரும் நிலையில் அமெரிக்கா சற்று மென்மையான போக்கை வடகொரியா தொடர்பில் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அணு ஆயுத சோதனைகளை நிறுத்தும்பட்சத்தில் வடகொரியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அளவுக்கு அமெரிக்கா இறங்கியுள்ளது.
0 comments: