இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அமேரிக்க மிசனில் நடைபெற்றது.நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.
மத்திய குழுவில் உள்ள வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் வடகிழக்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் அவற்றினை தீர்த்துவைப்பற்கு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள காணிப்பிரச்சினைகள்,அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டதாக தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
0 Comments