கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற குற் றச்சாட்டில் ஒருவரையும் கசிப்பு உற்பத்திக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சாவகச்சேரி நீதிவான் மன்றில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும் அவருக்கு உதவியாளராக செயற்பட்டவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார். இருவருக்குமான தண்டனைக் காலம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகதியில் 180 மில்லி லீற்றர் மற்றும் 90 மில்லிலீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்த இருவருக்கு தலா ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்ப ளித்த நீதிவான், அவர்களுக்கான தண்டணைக் காலத்தை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.(
0 Comments