Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ். போதனா வைத்தியசாலையில் அனைத்துக் குருதி வகைக்கும் தட்டுப்பாடு

சித்திரைப் புதுவருட காலம் என்பதால் குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,இதனால் நாட்டில் உள்ள எல்லா குருதி வங்கிகளிலும் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புதுவருடப் பிறப்பு காலத்தில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் என்பதாலும், யாழ்ப்பாணம் மற்றும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு குருதி தேவை என்பதாலும், குருதியைச் சேமித்துக் களஞ்சியப் படுத்த வேண்டிய தேவையுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலையில் அனைத்துக் குருதி வகைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். குருதிக் கொடையாளர்கள் குருதிக் கொடை வழங்க வேண்டும். நடமாடும் குருதிக் கொடை முகாம்களை ஏற்படுத்த அருகில் உள்ள குருதி வங்கியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றார்.

Post a Comment

0 Comments