யாழ்.குடாநாட்டிற்கு இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க செயலாளரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே னவின் செயலாளருமான பீ.பி. அபயகோன் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.யாழ். வருகை தரும் அவர் இந்த மாத இறுதிக்குள் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக நாளை சனிக்கிழமை வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.ஆகவே, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கும் முகமாக வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் நாளை முற்பகல்-10 மணிக்கு முன்னதாக யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.இதேவேளை ஜனாதிபதியின் செயலாளருக்கும் பட்டதாரிகளுக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது யாழ். அலுவலகத்திற்கு வருகைதரும் ஜனாதிபதியின் செயலாளருடன் வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் சந்தித்து உரையாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை சித்திரைப் புத்தாண்டு தினத்தையும் கொண்டாடுவதைத் தவிர்த்து கறுப்புச் சித்திரைப் புத்தாண்டாகப் பிரகடனப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments