யுத்த காலத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, மத்திய வங்கிக்கு முன்வைக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஏற்ப, இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்ட 37.7 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.2010 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் 2012 ஜனவரி 26 ஆம் திகதி வரையான காலத்தில் 28 தடவைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தங்க ஆபரணப் பொதிகளை பெற்றுக்கொண்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, தங்க நகைகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக உதவி பாதுகாப்பு செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார ஆங்கில வார இதழொன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments