தமிழர்களின் பாரம்பரியங்களை பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் நிகழ்வாக சித்திரைப்புத்தாண்டையொட்டிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் தெரிவித்தார்.மட்டக்களப்பு பெரிய ஊறணி ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் விளையாட்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பெரிய ஊறணி ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய முன்வளாகத்தில் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கிரிதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக பெரிய ஊறணி ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலய பூசகர் சிவத்திரு சந்திரகுமார் உமேஷ்காந்த் ஐயா,இருதயபுரம் இருதயநாதர் பங்குத்தந்தை எல்.ஜெயக்காந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மத ரீதியாக அல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் வகையில் தமிழர்களின் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த விளையாட்டு விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு இந்துக்கலாசார உத்தியோகத்தர்களான திருமதி சரோஜினி பாலசுந்தரம்,செல்வி.ரி.சிவதர்ஷிக்கா உட்பட ஆலய முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெற்றன.
இந்த நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் உரைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் உரைகளும் நடைபெற்றன.
0 Comments