கொழும்பு மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இந்த குப்பை மேட்டை அகற்றுமாறு பல வருடங்களாக அரசாங்கங்களை கோரி வந்ததாக தெரிவித்துள்ள பொதுமக்கள் தமது கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதாக கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குப்பை மேட்டில் தினமும் 800 தொன்கள் எடையுள்ள குப்பை இடப்பட்டு வந்ததாகவும் தற்போது அரசாங்கம் இதனை மூடியிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை பலர் இன்னமும் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் 26 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
0 comments: