Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் 16.04.2017 அன்று நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வின் போது குறித்த நேரத்தில் மீண்டும் கருடன் வானில் ஆலய வளாகத்தில் தாழ்வாகப் பறந்து ஆசீர்வாதம். !!!!!!

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் மகாதூபி கும்பாவிஷேக நிகழ்வானது   3.04.2017 அன்று கிரியைகளுடன்  ஆரம்பிக்கப்பட்டு 5.04.2017 நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. கும்பாவிஷேக நிகழ்வின் போது கிருஷ்ண பகவானின் கருட வாகனம் ஆலய வளாகப் பகுதியில் வானின் வலம் வந்து ஆசீர்வாதம் வழங்கியிருந்தது.  108 சங்குகளினால் சங்காபிசேகமும் 1008 சகஸ்நாம மந்திர உட்சாடனமும் 16.04.2017 அன்று னடைபெற்றது இந்நிகழ்வின் போது கருடன் வானின் தாழ்வாக ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது வரலாற்று நிகழ்வாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முந்திய காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறவில்லை என நிர்வாகத்தினர்  தெரிவிக்கின்றனர். கருடன் வலம் வந்த வேளையில் புகைப் படங்களை எடுத்து எமது செய்திப்பிரிவுக்கு பக்தர்கள் அனுப்பியுள்ளனர். இதனைப் படங்களில் காணலாம். 



இந்நிகழ்வினை போது காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சண்முக மகேஸ்வரன் குருக்கள், சிவசிறி  சிவசிறி.சி.சாந்தரூபன் குருக்கள், சிவசிறி ச.மயூரவதனக் குருக்கள், சிவசிறி கலாகரன்  குருக்கள், சிவசிறி பு.சிந்துஸன் குருக்கள் ஆகியவர்கள் கிரியைகளை  நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments