கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடவடிக்கையில் வடகொரிய ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வடகொரிய நாட்டின் இராணுவ தினம் மே மாதம் 25ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாள் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்த வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை குறித்து அமெரிக்க அரசாங்கம் பல தடவைகள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தன.
எனினும், வடகொரியா அந்த எதிர்ப்புக்கள் எதனையும் காதில் வாங்கிக் கொண்டதாக இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆறாவது அணு பரிசோதனையை நடத்தியிருந்தது. எனினும் அந்தச் சோதனை தோல்வியில் முடிந்தது.
ஆனாலும் அந்த நாட்டு ஜனாதிபதி தமது ஆராய்ச்சியும், சோதனைகளும் நிறுத்தப்படாது என்றும், விரைவில் அடுத்த பரிசோதனை நடவடிக்கைகளை செய்வதற்கு தயாராவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, வடகொரிய நாட்டின் இராணுவ தினம் மே மாதம் 25ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாள் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்த வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது அமெரிக்காவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தங்களது முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பது போல இருக்கிறது வடகொரியா.
வடகொரியாவின் இந்த நிலைப்பாட்டால், கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
எனினும், இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அந்நாடு, அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த நிலைப்பாட்டினை அடுத்து, தனது நவீன ஆயுதம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: