அமெரிக்காவின் வான்பரப்பிற்குள் நெருங்கவந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு விமானங்களை இடைமறித்து, அமெரிக்கப் படை திருப்பி அனுப்பியுள்ளது என அந்த நாட்டுப் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அமெரிக்க இராணுவத் தரப்பினர் வெளியிட்டிருக்கும் தகவலின் படி,
இரு ரஷ்யாவின் போர் விமானங்கள் அலஸ்கா கடற்கரையின் சர்வதேச வான் பகுதியில் வைத்து இடைமறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, பென்டகன் பேச்சாளர்களில் ஒருவரான கரி ரோஸ் ரஷ்யாவின் போர் விமானங்களை நாங்கள் தொழில்சார் மற்றும் பாதுகாப்பான முறையில் இடைமறித்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, அமெரிக்காவின் ஜெட் விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை 12 நிமிடங்கள் பின்தொடர்ந்திருந்தது, இந்நிலையில் இரு விமானங்களும் கிழக்கு ரஷ்யாவை நோக்கி பறந்துள்ளதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக அமெரிக்காவின் வான் பரப்பிற்குள் ரஷ்ய உளவு விமானம் ஒன்று வேவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தவாரம் ரஷ்யாவின் இந்த போர் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பிற்குள் வர முயற்சித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவின் அணு பரிசோதனை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் ரஷ்ய விமானப்படையின் இந்தச் செயற்பாடு சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
0 comments: