உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட உள்ளது.
விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2016 – 2017ம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டிப் புள்ளிகள் மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வௌியிடுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2016 – 2017ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
தற்போது விண்ணப்ப படிவங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
0 Comments