Home » » லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு- பெண்மணியொருவர் வயிற்றில் காயங்களுடன் கதறினார்

லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு- பெண்மணியொருவர் வயிற்றில் காயங்களுடன் கதறினார்

லண்டனின் வடமேற்கில் உள்ள விலெஸ்டன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள லண்டனின் காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் குறித்து முக்கிய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கென்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கiயில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் லண்டன் பாராளுமன்ற வீதி சம்பவத்திற்கும் இந்த தேடுதல் நடவடிக்கைகளிற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விலெஸ்டனில் உள்ள வீடொன்றை நீண்டநாட்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வியாழக்கிழமை ஆயுதமேந்திய பொலிஸார் குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து மயக்கமருந்தை தெளித்த பின்னர் பெண்ணொருவர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்
_95827255_willesden_raid_624
இதேவேனை கென்டில் 16 வயது சிறுவனும் 20 வயதான ஆணும் பெண்ணும் 43 வயது பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை விலெஸ்டன் பகுதியில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதன் மூலம் ஆபத்தொன்றை கட்டுப்படுத்தியுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பயங்கரவாத சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை பயங்கரவாத நடவடிக்கையொன்றிற்கு திட்டமிட்டனர் என்ற அடிப்படையிலேயே கைதுசெய்துள்ளோம். அவர்கள் தற்போது தென்லண்டன் காவல் நிலையத்தில் உள்ளனர் எனவும் அதிகாhகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹார்ல்ஸ்டன் வீதியில் வசிக்கும் 50 வயது நபர் ஓருவர் பெண்மணியொருவர் கைவிலங்குடன் வாகனத்தில் ஏற்றப்படுவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மூகமூடியணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்களை நான் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த இன்னொருவர் துப்பாக்கிசத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் வசித்தவர்கள் முஸ்லீம்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்மணியொருவரிற்கு கையிலும் வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டதாக மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்
சோமாலியாவை சேர்ந்த குடும்பமே அந்த வீட்டில் வசித்துவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த பெண் என்னை எனது ஆடையை எனது உடலை தொடவேண்டாம் என சத்தமிட்டதை பார்த்ததாகவும் ஓருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை காரணமாக அவரை கைதுசெய்யவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
_95821973_nw10.2
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |