Advertisement

Responsive Advertisement

மே தின ஊர்வலத்தில் 5,000 பஸ்கள்

மேதின ஊர்வலங்களுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 5 ஆயிரம் பஸ்களைக் கோரியுள்ளன என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், பணம் செலுத்தப்பட்டதன் பின்னரே, உரிய பஸ்கள் கையளிக்கப்படும் என்று, சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.
அந்த வகையில், 100 கிலோமீற்றர் தூரத்துக்கு குறைவாயின் பஸ் ஒன்றுக்காக 7,500 ரூபாயும் 100க்கும் 150க்கும் இடைப்பட்ட கிலோமீற்றருக்காக 11,000 ரூபாயும், 250 கிலோமீற்றருக்கு 13,500 ரூபாயும், 350 கிலோமீற்றருக்கு 16,500 ரூபாயும் 750 கிலோமீற்றருக்கு மேற்பட்டால் 35,000 ரூபாயும் அறிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments