யாழ்ப்பாண – காங்சேன்துறை கடற்பகுதியில் பெருந்தொகை போதைப் பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்டது, ஹெரோயின் என சந்தேகிக்கப்படுவதோடு இவற்றின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளின் பெறுமதி 162 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமான்டர் சமிந்த வளாகுலுகே இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
அடுத்த கட்ட விசாரணைக்காக குறித்த போதைப் பொருள் தொகையும், சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் இந்திய தேசிய கொடியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
0 Comments