Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் காணாமற்போன பெண் தொண்டர் ஆசிரியர் மன்னார் காட்டில் சடலமாக மீட்பு-சந்தேகத்தில் கணவர் கைது

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் சுமார் ஒன்றரை மாதங்களின் சிதைவடைந்த நிலையில் உடற்பாகங்களாக மன்னார் மாவட்டம் மடு பிரதேச செய லாளர் பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் கடந்த புதன் கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா பாண்டியன் குளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான தொண்டர் ஆசிரி யரான ஏ.யாழினி (வயது-31) ஆவார். சந்தேகத்தின் பேரில் மன்னாரில் புள்ளி விபரவியல் திணைக்களத்தில் கடமையாற்றும் அவரது கண வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு நேற்று வியாழன் மாலை சென்ற மன்னார் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ள தோடு மீட்கப்பட்ட சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.மேலதிக விசார ணை களை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆசிரியர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அளவில் காணாமற் போனதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது சடலம் ஆடைகள் மற்றும் தடயங்கள் மூலம் அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓமந்தைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறி ப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments