Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முதலாவது T 20 யில் இலங்கை வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டிவென்டி20 போட்டியில் கடைசிப்பந்தில் சமாரகப்புகெதர அடித்த நான்கு ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது
முதலில்துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி இருபது ஓவர்களில் ஆறுவிக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. நீண்டநாட்களிற்கு பின்னர் அணிக்கு திரும்பிய லசித்மலிங் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியதுடன் இரண்டு கட்ச்களையும் பிடித்தார்.
பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்தாடியவேளை தரங்க ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும் திக்வெலவும் முனவீரவும் அதிரடியாக ஆடி சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தினர்.திக்வெல 30 ஓட்டங்களையும், முனவீர 44 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்,பின்னர் அசல குணரத்தின அதிரடியாக ஆடி 52 ஓட்டங்களை பெற்றார் கடைசிப்பந்தில் ஓரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் கப்புகெதர நான்கு ஓட்;டங்களை பெற்றார்.

Post a Comment

0 Comments