Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகரையில் வெடிக்காத நிலையில் 05 மோட்டார் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி பகுதியில் வெற்றுக் காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை(16) பகல் இவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
கதிரவெளி தேம்புகர் வீதியில் உள்ள குறித்த காணியில் அதன் உரிமையாளர் நிலத்தை தோண்டும் போது பாதுகாப்பான முறையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்று குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments