மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் வீதியில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள வீதி பிரிப்பு தடுப்பில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிந்தவர் பாலமீன்மடு பிரதேசத்தினை சேர்ந்த 19வயதுடைய சுரேஸ் சஜீந்த் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதிக வேகமே விபத்துக்கு காரணம் என மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகி;னறனர்.

0 Comments