மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் இருதயபுரசந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 4 மணியளவில் பாரவூர்தியொன்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாஎல பகுதியில் இருந்து காத்தான்குடிக்கு நிலத்திற்கான பதிகல் ஏற்றிச்சென்ற பாரஊர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின்போது தெய்வாதீனமாக சாரதியும் உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன் பாரா ஊர்தியும் கடுமையாக சேதமாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments