சொத்து மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சகிகலா, இளவரசி, சுதாகரனுக்கு எதிராக தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தலா ஒவ்வொருவருக்கும் நான்கு ஆண்டுகள் கடுங்கால சிறைத்தண்டனையும் தலா பத்துக் கோடி ரூபா தண்டப்பணமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அடுத்து வரும் 24 மணித்தியாலத்திற்குள் நால்வரும் சரணடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்துள்ளமையால் மிகுது மூவரும் கைது செய்யப்படவுள்ளனர்.
இதனடிப்படையில் தமிழக முதல்வராக சசிகலாவினால் பொறுப்பு ஏற்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
அடுத்த வரும் பத்து ஆண்டுகளுக்கு சசிகலா சட்டமன்ற உறுப்பினராகவோ முதலமைச்சராகவோ வர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சசிகலா முதல்வராகும் கனவு தவிடுபொடியானது.
0 Comments