Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகளே நீதிமன்றம் தீர்ப்பு : 4 வருட சிறை தண்டனை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி 4 வருட சிறைத்தண்னை தலா 10 கோடி ரூபா தண்டம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கிணங்க சசிகலா உள்ளிட்ட மூவரும் 2 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு தொடர்பான விபரங்கள்
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று (பிப்ரவரி 14) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது

Post a Comment

0 Comments