யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி உறங்கிக் கொண்டிருந்ததாகவும், ஏனைய மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்ட பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
இத்தீ விபத்தினால் 3 அறைகள் பாதிப்புக்கு உள்ளானதுடன் மின்அழுத்தியினை அணைக்காமல் சென்றமையே இவ்விபத்தக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று காலை வத்தளைப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இன்று காலை தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் குப்பைகளை சேர்த்து தீ வைத்து விட்டு, பக்கத்திலிருந்த கடைக்கு சென்ற வேளை அந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
0 Comments