Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊழல் பற்றி கதைக்க சம்பந்தனுக்கு உரிமையில்லை : சு.க பேச்சாளர்

நாட்டில் ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படுவதாக தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சம்பந்தன் நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் இந்த கருத்து தொடர்பாக இன்று குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவருக்கு அவ்வாறு கூறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் வங்கி உடைப்பு , கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் அதற்கு உதவியவர்கள் இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு அவ்வாறு கூற முடியாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments