ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் வழங்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த வகுப்புக்களுக்கு உரித்தான பாடங்களை உள்ளளடக்கியதாக அந்த ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
0 Comments