Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடகிழக்கில் புதிய பொதுநூலகங்களை அமைக்க பிரதமர் நடவடிக்கையெடுக்கவேண்டும்-கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை

யாழ் பொதுநூலகம் ஐக்கிய தேசிய கட்சியின் காலப்பகுதியில் எரியூட்டப்பட்டதற்கு பிரதியுபகாரமாக வடகிழக்கில் புதிய பொதுநூலகங்களை அமைக்க பிரதமர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.
மாகாணசபை உறுப்பினா கருணாகரமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடகிழக்கில் இளைஞர்களை கட்டியெழுப்பவேண்டுமென்றால் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் ஊக்கப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.
ஆயுதப்போராட்டம் நடைபெற்றுவந்த காலப்பகுதியில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் ஆயுதப்போராட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.போராட்டத்திற்குள் உள்வாங்கப்படாத ஒரு பகுதியினர் கல்வியில் கவனம் செலுத்தியிருந்தாலும் அச்ச உணர்வுடனேயே அவர்கள் வாழ்ந்துவந்தனர்.
அந்த அச்சசூழ்நிலை இன்று நீங்கியுள்ளது.இந்தவேளையில் ஆயுதப்போராட்டமும் எமது பகுதிகளில் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான இளைஞர்கள் வேறு திசைகளை நோக்கிசெல்லும் நிலையேற்பட்டுள்ளது.
கடந்த கால அரசாங்கம் வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழும்பகுதிகளில் திட்டமிட்ட வகையில் மதுபானங்களும் வேறு போதைப்பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் எமது பகுதிகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக முஸ்லிம் பகுதிகளிலும் போதைபாவனைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான போதைபாவனைகளில் இருந்து எமது இளைஞர் யுவதிகளை விடுவிக்கவேண்டுமாகவிருந்தால் அவர்களை விளையாட்டுத்துறைக்குள் உள்வாங்கவேண்டும்.
விளையாட்டுத்துறையை அபிவிருத்திசெய்வதன் மூலமாக இளைஞர் யுவதிகளை ஊக்கப்படுத்தி அவர்களை வேறு வழிகளில் உள்ள நாட்டத்தினை விளையாட்டுத்துறைக்கு கொண்டுவருவோமாகவிருந்தால் எமது கலாசார விழுமிங்களை பாதுகாத்துக்கொள்வதோடு சமூக சீர்கேடுகளிலும் இருந்து எமது சமூகத்தினை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
இன்று இந்த நாட்டில் எமது பிரதேசத்தில் ஒரு ஸ்திரத்தன்மை இருந்துவருகின்றது.இதனைக்குழப்புவதற்கு சில சக்திகள் பொதுபலசேனா போன்ற சக்திகளை தூண்டிவிட்டு ஸ்திரத்தன்மையினை குழப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த காலத்தில் சிங்கள பேரிவான அரசுகளின் ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் இடம்பெற்ற கலவரங்களினால் தமிழர்களின் உயிர்,உடமைகள் பறிக்கப்பட்டன,பொருளாதார ரீதியில் தாக்கப்பட்டுள்ளோம்.
குறிப்பாக 1983ஆம் ஆண்டு கலவரத்தில் தென்னிலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்,கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன.அந்த இழப்புகளுக்கு சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் நஸ்ட ஈடு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.அது வெறும்வாய்பேச்சாகவே இருந்தது தவிர எந்த மக்களுக்கும் நஸ்ட ஈடு வழங்கப்பட்டதாக அறியமுடியவில்லை.
இதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.தெற்காசியாவிலேயே பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ் நூலகம் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டது.
இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ் நூலகம் எரிப்பிற்கு பாராளுமன்றத்தில் மன்னிப்புக்கோரியுள்ளார்.
அவர் மன்னிப்பு கோருவதுடன் மட்டும் நின்றுவிடாது அந்த நூலகம்போன்று வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதே தரத்தில் நூலகங்களை அமைத்துக்கொடுக்கும்போதே ஐ.தே.கட்சி புரிந்த அநீயாயத்திற்கு ஒரு பிரதியுபகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்.
IMG_0198IMG_0200IMG_0203IMG_0205

Post a Comment

0 Comments