கண்டி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இறங்கிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீர்த் தேக்கங்களில் ஏறி இறங்கும் Sea Plane என்றழைக்கப்படும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. நேற்று பிற்பகல் 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானத்தை நீர்த்தேக்கத்தில் இறக்கிய போது நீர்த்தேக்கத்தில் காணப்பட்ட மரக்கட்டையொன்றில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது விமானத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments