Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தினை சேர்ந்த 150ற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 07.12.2016 அன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 04ம் திகதி தோட்ட தொழிற்சாலையில் பணிப்புரியும் உத்தியோகஸ்தர்கள் மத்தியில் தொழிற்சாலையில் வைத்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உத்தியோகஸ்தர்கள் 07.12.2016 அன்று வழமைப்போல் தொழிலுக்கு வந்தபோதிலும் தோட்ட அதிகாரியால் தொழிற்சாலையை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை தோட்ட தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்தை வேறு தொழிற்சாலைக்கு அனுப்படும் என தோட்ட அதிகாரி தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாம் பறிக்கும் கொழுந்தை வேறு தோட்டத்திற்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்தே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments