யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
குறித்த விபத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக சங்கத்தான பகுதியில் இன்று முற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலாவுக்காக 14 சிங்களவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானே விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹயஸ் வானின் டயரில் காற்று போயுள்ளதால், வீதியை விட்டு விலகி அரச பேருந்துடன் மோதியுள்ளது.
இதில் 7 ஆண்களும் மற்றும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வானில் பயணித்த ஏனைய நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments: