நத்தார் பண்டிகையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.
எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் நீர்கொழும்பு – பாணந்துறை இடையில் இந்த சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
அதன்படி அன்றைய இரு தினங்களிலும் காலை 08.05 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பிற்கும், காலை 09.25 மணிக்கு நீர்கொழும்பில் இருந்து பாணந்துறைக்கும் விஷேட புகையிரத சேவை இடம்பெறவுள்ளது.
அத்துடன் பிற்பகல் 02.00 மணிக்கு பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பிற்கும், பிற்பகல் 04.35 மணிக்கு நீர்கொழும்பில் இருந்து மருதானை வரையிலும் விஷேட புகையிரத சேவை இடம்பெறவுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.
இந்த புகையிர சேவைகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் 22ம் திகதி முதல் ஜனவரி மாதம் 03ம் திகதி வரை சில புகையிரதங்களுக்கு மேலதிக பயணிகள் பெட்டிகளை இணைத்துக் கொள்ள இருப்பதாகவும் விஜய சமரசிங்க கூறினார்.
0 comments: