மட்டக்களப்பு ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமானது பழம் பெரும் வரலாறுகளைக் கொண்ட ஆலயமாகும். இவ்வாலயத்தில் கடந்த சில காலங்களாக ஆலய நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சனைகளும் ஆலய யாப்பிற்கு பொருந்தாத நடைமுறைச் சிக்கல்களும் இருந்து வந்தன. இதன் விளைவாக இவற்றை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்காக ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளரின் உதவி நாடப்பட்டது. மாற்றுக்குழுக்களின் அதீதப் போக்கினால் பிரச்சினைகள் அதிகரித்துச் சென்றன. இதன் விளைவால் நீதிமன்றம், அரசாங்க அதிபர் வரை செல்லவேண்டி ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் பிரதேச செயலாளரின் தலைமையில் ம.தெ.எ.ப. பிரதேச செயலகத்தில் புதிய நிருவாகம் நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவோடு ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டது. இதில் தலைவராக திரு.க.ஞானரெத்தினம் அவர்களும், செயலாளராக திரு.சா.துவாரகன், பொருளாராக திரு.அ.ராகவன் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்புள்ள சேவை இங்கு பாராட்டத்தக்கது. பிரதேச செயலகத்தில் அரசாங்க அதிபரின் கட்டளையின் பேரில் ம.தெ.எ.ப. பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பழைய நிர்வாக சபை உறுப்பினர்கள் சமூகம் தராது புறக்கணித்தமை உயரதிகாரிகளின் கட்டளையை அவமதித்த செயலாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதை விடுத்து கல்வியலாளர்களையும், உயரதிகாரிகளையும் அவமதிப்பது அறிவுடைய, புத்தியீவிகளுக்கு ஏற்புடையதன்று. எனவே இது நீதிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகின்றது.
- கீதாசாரம் -
- கீதாசாரம் -
0 Comments