மத்திய வங்கி பிணை முறி விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாற்றுக்களை முன்வைப்பது நியாயமற்றது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோப் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது நியாயமற்றது. அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமாகவிருந்தால் அதனை நாம் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்
0 Comments