Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களின் மரண விசாரணையை துரித படுத்துமாறு ஜனாதிபதி சட்டமா அதிபருக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பிரதான விரிவுரையாளர்கள், மாணவ பிரதிநிதிகளை  சந்தித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் மிகவும் கவலையடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி பக்கச்சார்பற்றதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்களின் வேண்டுகோளுக்கமைய மரண விசாரணை அறிக்கையை விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அந்த அறிக்கை கிடைத்தவுடன் குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments