கல்வியின் மூலம் தனி நபர்களிடத்தில் இன,மத,மொழி பிரதேச வேறுபாடுகள் அற்ற வகையில் சமூக நல்லுறவினைப் பேணுவதினூடாக நாட்டில் சாந்தி, சமாதானம், ஒற்றுமை, நல்லினக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினையும் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் சமூக நல்லுறவினை ஏற்படுத்தும் முகமாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம் இன்று தீபாவளி விசேட சிறப்பு நிகழ்ச்சியினைக் கொண்டாடியது.
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் இச் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம், முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. கே.ஜெயந்திமாலா, போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன், பட்டிருப்பு வலய ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் திரு.எஸ்.குருபரன், பட்டிருப்பு கல்வி வலய நிருவாக உத்தியோகஸ்த்தர் திருமதி. பா.மகாலிங்கம், நிதி உதவியாளர் திருமதி.வ.யோகலிங்கம் ஹவ்சோ நிறுவனத் தலைவர் ஜனாப் ஜௌவ்பர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள் என்பன நடைபெற்றன. இந்து,இஸ்லாம்,கிறிஸ்த்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தோர் இந் நிகழ்வில் பங்குபற்றி தங்களது மதங்களின் பெருமைகளையும் அதனூடான ஒற்றுமையினையும் வெளிக்காட்டி நின்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments