Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நாசிவன்தீவு திலீப்குமார் சனூஜனின் விருப்பத்தை நிறைவேற்றிய மைத்திரி..!


மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த திலீப்குமார் சனூஜன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
80 ஆண்டுகள் பழமைவாய்ந்த குறித்த பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக திலீப்குமார் சனூஜன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றிய அதேவேளை, திலீப்குமார் சனூஜனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பரிசில்களையும் வழங்கினார்.
இதேவேளை, இந்த சந்திப்பில் பாடசாலை அதிபர் ரி.ஜெயபிரதீபன், வகுப்பாசிரியர் ஏ.மோகன்ராஜ், மாணவனின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments