வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் ஒரு போதும் தொடர்பு கிடையாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தாம் போர்க்களத்தில் இருந்த போது கோட்டாபய ராஜபக்ஸ, துணை இராணுவக் குழுக்களை அமைத்து வடக்கு, கிழக்கில் செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பிலான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கோட்டாபய ராஜபக்ஸவே பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், ஆவா குழுவுடன் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 35 ஆயிரம் பேரைக் கொண்ட விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்த போது, 10 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒன்றின் மூலம் ஆவா குழுவையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments