வரவு செலவு திட்டத்தினுடாக 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாயால் குறைப்பு. வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு , நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபா குறைப்பு. உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு. பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயால் குறைப்பு. பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு
இதேவேளை 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ரூபா எனவும் உள்நாட்டு பால் மா 250 கிராமின் விலை 250 ரூபாய். எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது


0 Comments