Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு –திருமலை வீதியில் உள்ள முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரு பகுதியில் நடாத்தப்பட்டுவரும் விடுதியில் இருந்து முதல்வர் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்து பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட மூன்று பெண்களும் ஒரு ஆணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.sivakeetha

Post a Comment

0 Comments