இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மீண்டும் நாட்டில் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது. தெரிந்தே , தெரியாமலோ தமது அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை தூண்டுகின்றனர். அதற்கு எதிராக நடவடிக்கையெடுக்க தற்போதுள்ள சட்டம் போதுமானது. இதன்படி பொலிஸார் சட்டத்தை செயற்படுத்த வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -
0 Comments