மது போதையில் வாகனம் செலுத்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தல் உள்ளிட்ட 6 போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்துதல் , காப்புறுதியில்லாது வாகனம் செலுத்துதல் , சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் , இட பக்கமாக வாகனமொன்றை முந்துதல் , குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் பயணித்தல் , ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்துதல் ஆகிய குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது


0 Comments