கடந்த யுத்த காலங்களில் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் குடியிருந்த பல பகுதிகளில் தொல் பொருட்கள் மறைமுகமாக தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் கொண்டுவந்து புதைக்கப்பட்டிருக்கின்றது, அதே நிமிர்த்தம் தான் செங்கலடி பதுளை வீதியிலுள்ள மதகுருவின் காணிக்குள் இவ்வாறான தொல்பொருள் புதைக்கப்பட்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடுகளைக் கண்டித்து செங்கலடியில் ஆலய குருக்கள்இ பூசகர்கள்இ தர்ம கர்த்தாக்கள்இ இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ பொதுமக்கள் இணைந்து இன்று(22) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது,
தொல்பொருட்கள் என்ற போர்வையை மையமாக கொண்டு அரசு வடகிழக்கு மக்களின் காணிகளை சுகீகரிக்க இடமளிக்கமாட்டோம்.வடகிழக்கில் 325 விகாரைகளுக்கு தான் 100 மில்லியனை வழங்குவதாக, புத்தசாசன அமைச்சர் கூறியிருக்கின்றார். ஆனால் வடகிழக்கில் 325 விகாரைகள் இல்லை, இவைகள் அனைத்தும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றது.தமிழர் தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட பௌத்த விகாரை மற்றும் மதச் செயற்பாடுகளுக்கு இந்து குருமார்கள் ஒன்றியமும் மக்கள் பிரநிதிகளாகிய நாங்களும் அனுமதிக்க முடியாது.மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதியின் கைது உடனடியாக நடத்தப்பட வேண்டியது, ஆனால் கைதுகள் அத்தனையும் தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.கைது தொடர்பான பின்னனியில் பலர் இருப்பதுடன் பொலிஸார் கூட பிக்குவின் அடாவடித்தனத்துக்கு பக்கச்சார்பாக இருக்கின்றார்கள்.குறித்த பிக்கு தனியார் காணிக்குள் அத்து மீறிச் செல்லக்கூடாது எனும் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும் பொலிசார் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர்.நாட்டில் பௌத்த மதத்துக்கு ஒரு சட்டம் இந்துமதத்துக்கு ஒரு சட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் வடமாகாண ஆளுனர் இலங்கை இந்து இந்துமதத்தினுடைய நாடு என கூறியிருக்கின்றார்
ஆனால் மட்டக்களப்பு விகாராதிபதி பௌத்த துறவியென தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இந்துக்கள் வாழ்ந்த இடங்களில் பௌத்த விகாரைகள் இருந்ததாக கூறி அடாவடித்தனம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
0 Comments