Advertisement

Responsive Advertisement

25,000 ரூபாவாக தண்டப்பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கும் எதிர்ப்பு

வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறும் 7 குற்றங்களுக்கான தண்டப்பணத்தை 25,000ரூபா வரை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பஸ் சங்கங்கள் சிலவும் முச்சக்கர வண்டி சங்கங்கள் சிலவும் திட்டமிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த போராட்டத்தில் கெமுனு விஜேரட்ன தலைமையிலான இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கலந்துக்கொள்ளாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக குறித்த சங்கங்கள் இன்று கொழும்பில் கூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக தண்டப்பணத்தை அதிகரிப்பதன் மூலம் பொலிஸார் மத்தியில் ஊழல் மோசடிகள் அதிகரிக்கும் என அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment

0 Comments