இலங்கையில் 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பட்டியலில் 13 பேர் உள்ளனர். சாதவன் திலகேசன், செல்வராஜா ரஜிவர்மன், பி.தேவகுமாரன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சுபாஷ் சந்திரபோஸ், பஸ்தியன் ஜோர்ஜ், சக்திதாஸ் சுரேஸ், சிவகாமி சிவராஜா, மொஹமட் ரஸ்மி, லசந்த விக்ரமதுங்க, சம்பத் லக்மால் டி சில்வா, சாம்பசிவம் பாஸ்கரன், சின்னத்தம்பி சிவமகாராஜா அதேபோல் காணமற்போன ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார், 87 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இவர்கள் தொடபான பெயர் பட்டியலும் உண்டு. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 20. 5 ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. லங்கா ஈ நியூஸ் சிரச டெய்லி மிரர் பத்திரிகை சியத்த ஊடக நிறுவனம். பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.இதனால் தற்போது சில வழக்குகளின் தகவல்கள் மற்றும் சாட்சியங்களை மீள ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments